Friday, September 28, 2012

அறிமுகம் :)


பிஸ்மில்லாஹ் -- இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

சுய அறிமுகம்:
சகோஸ், பொதுவாகவே இந்த இடத்தில்தான் நாம அதிகமா சொதப்புவோம்... என்ன வேலைன்னு கேட்டால் கூட நம்மளுடைய போஸ்ட் அல்லது பொசிஷன் என்னன்னு சொல்லிடலாம்.... ஆனால் சில பேர் அதுல என்ன வேலை செய்வீங்க.... அப்படி இப்படின்னு கேட்க ஆரம்பிச்சா.... அப்புறம் நமக்கு நாக்கு மரத்துப் போயிடும்.... சரி விடுங்க.... அவங்களை எப்படி சமாளிக்கலாம்னு முதல்லேர்ந்து பார்க்கலாம்.
தமிழ் மொழியில இருக்குற மாதிரியே ஆங்கிலத்திலும் பேச்சு வழக்கில் ஒன்றும், எழுதும்போது ஒன்றுமாக உபயோகிப்பார்கள். பொதுவாக பேசுவதை Informal என்றும், எழுதுவதை Formal என்றும் அழைப்பார்கள். பேச்சிலும் அலுவலக ரீதியாக பேசுவது வேறு (Formal – ஃபார்மல்), நட்புக்களுடன், பொது ஜனத்துடன் பேசுவது வேறு (Informal – இன்ஃபார்மல்). இங்கே இரண்டு சந்தர்ப்பங்களிலும் உங்களைப் பற்றிய அறிமுகத்தை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். Let’s go….

பொதுவாக எல்லாரிடமுமே கீழிருப்பது போல் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
Hi, My name is Anisha
உங்க பேரு மகா கனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தர்ராஜன்ஆக இருந்தாலும், முன்னாடி நிக்கிறவர் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கனும்ன்னா
Hi, my name is Sundar
அப்படின்னு சொன்னாலே போதும். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களை / சூழ்நிலைகளை Casual / Informal அப்படின்னு சொல்வோம் ஆங்கிலத்தில். சரியா??
அதுவே ஒரு இண்டர்வியூக்கு போறீங்க... அல்லது பிஸினஸ் விஷயமா ஒரு பெரும்புள்ளியை அலுவலக ரீதியா சந்திக்கிறீங்க.... இந்த மாதிரி சூழ்நிலைகளை Formal அப்படின்னு சொல்வோம். இதுல நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது முழுப்பேரையும் சொன்னால்தான் நலம்.
[இராஜாதி ராஜ மார்த்தாண்ட குலோத்துங்க பராக்கிரம சுப்பையன்ன்னு பேர் இருந்தால் அதை பயோடேட்டாவோட நிறுத்திக்குங்க ப்ளீஸ்....வேணாம்...:(( ]

உதாரணத்துக்கு :
Hi My name is, Omar Abdullah.

(
அல்லது கூப்பிடுவதையும் முழு பேரையும் ஒரே நேரத்தில் சொல்ல ஆசைப்பட்டால் )
Hi, My name is Karthick. Karthick Natarajan.
(இதை இன்னும் சில விதங்களிலும் சொல்லலாம்.... உங்களுக்கு எந்த ஸ்டைல் பிடிச்சிருக்கோ...அந்த ஸ்டைல்ல :))
Hi, I am Bombay Batsha. Call me Rajini.
(smile  கண்டிப்பா உதிர்ந்து விடாமலே வைங்க)

சில சமயம் ஃபோனில் அல்லது ஈ-மெயிலில் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள தேவைப் படும்போது இப்படியும் பேசலாம் / எழுதலாம்:
Hello, This is Ibrahim.
(அல்லது தெரிந்த நபருடன் பேசுகிறோம், அவருக்கு நம்மை அடையாளம் காண இயலவில்லை எனில்)
Hey It's me...Anisha. Remember??
(அல்லது)
Hey It's me...Shruti... I am your …
(team mate / class mate / assistant / manager....இப்படி எந்த உறவுமுறை உங்களுக்குள் இருக்கிறதோ அதை உபயோகியுங்கள்.)

(
அல்லது முதன் முதலில் யாரையேனும் சந்திக்கிறீர்கள். முதல் தடவையாக ஒரு டீமில் இணைகிறீர்கள்..அல்லது ஒரு வகுப்புக்கோ / குழுவிற்கோ சுய அறிமுகம் தர வேண்டி உள்ளது....அல்லது திடீரென ஒரு ஸ்டேஜில் உங்களிடம் மைக் கொடுத்து விடுகிறார்கள்....இந்த மாதிரி சமயங்களில்)
Hi. Let me introduce myself... I am Michael.
(அல்லது)
Hello all. Allow me to introduce myself. I am Amina from Wonderland.
(smile please... :)
(அல்லது)
I just wanted to introduce myself.... I am Jaleela, your new Catering Teacher.

(
அல்லது உங்கள் குழந்தைகளின் நட்புக்களின் பெற்றோரை சந்திக்கும் தருணம்.... இது மாதிரி உதாரண சம்பவங்களில்)
I don't think we have met before.... I am Kannan.And you?
(இது casual நினைவில் வையுங்கள்...)
(அல்லது)
I don't think we've actually met formally yet,... I am Shah. May I know about you??
(தமிழில் சொன்னால்.... இது வரை நாம சந்திச்சதில்லைன்னு நினைக்கிறேன்.... நான் ஷாஹ். உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா??--- இது formal/business சந்தர்ப்பம்.... நினைவில் வைங்க)
இதில் இருப்பது போலவே பேச வேண்டும் என்றில்லை. மெதுவாக், தெளிவாக அதே நேரம் அழுத்தமாக நீங்கள் உங்களின் பெயரை “நான்” / I am என்று உங்களுக்கு தோதான விதத்தில் சொன்னாலே போதுமானது.

சரி, இந்தப்பாடத்தில் ஒரு சின்ன தேர்வு. முயற்சித்துப் பாருங்கள்
1.       ஜோசப் ரயில்ல பயணம் செய்யறார். கொஞ்சம் தொலைதூர பயணம் என்பதால் அருகில் இருப்பவரிடம் பேச நினைக்கிறார். அவரை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வார்???
2.       நிஷா வெளிநாட்டுக்கு புதிது. அப்பார்ட்மெண்ட்டுல வசிக்க வர்றாங்க. கணவன் வேலைக்கு போனதும் பக்கத்து அப்பார்ட்மெண்ட்டுல இருக்கும் பெண்ணிடம் நட்பை துவங்கலாம்னு நினைச்சு போறாங்க. கதவை திறக்கும் அந்த பெண்ணிடம் எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வாங்க??
3.       வருண், தன்னுடைய மனைவியோடு அவங்களின் குழந்தை கிஷன் படிக்கும் ஸ்கூலுக்கு போறாங்க. அங்கே தலைமையாசிரியரிடம் எப்படி அவங்களை அறிமுகப்படுத்திக்குவாங்க???

இதற்கான பதில்களோடு அடுத்த திங்கள் இன்ஷா அல்லாஹ், இறைவன் நாடினால் சந்திக்கலாம். அதுவரை, Have a Happy weekend :))